தேசிய செய்திகள்

மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகள்... பட்டியலில் 4-ம் இடத்தில் இந்தியா..!

மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தைப் பெற்றுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சர்வதேச அளவில் 50 நாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் குறித்து 'கம்பேர் தி மார்க்கெட்' என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில், உலகின் சிறந்த ஓட்டுநர்கள் மற்றும் மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிறந்த ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் ஜப்பான் உள்ளது. தொடர்ந்து 2-வது இடத்தில் நெதர்லாந்து, 3-வது இடத்தில் நார்வே ஆகிய நாடுகள் உள்ளன.

இதே போல் மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் தாய்லாந்து முதல் இடத்திலும், பெரு 2-ம் இடத்திலும், லெபனான் 3-ம் இடத்திலும் உள்ளன. இந்த ஆய்வின்படி, மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்