தேசிய செய்திகள்

பெண்களின் ஆதரவின்றி நாடு வளர்ச்சி அடையாது; ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு

பெண்களின் ஆதரவின்றி நாடு வளர்ச்சி அடையாது என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இன்று கூறியுள்ளார்.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இன்று நடந்த கூட்டம் ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்பொழுது, குடும்ப விவகாரங்களை பெண்கள் கையாண்டு வருகின்றனர். அவர்கள் பெரிய துறைகளில் தலைவர்களாக செயல்படுகின்றனர். இது ஒரு நல்ல அடையாளம் என கூறினார்.

அவர் தொடர்ந்து, பெண்கள் ஆண்களை விட குறைந்தவர்கள் அல்ல. அவர்களுடைய ஆதரவின்றி நாடு வளர்ச்சி அடையாது. மக்கள் தங்கள் மனநிலையை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. பெண்களை அவர்கள் அடிமைகளாக நடத்துவதற்கு பதிலாக பெண் கடவுளாக நடத்த வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பிற்கான கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சட்டத்திற்கு என வரம்பு உள்ளது. பெண்கள் பாதுகாப்பு பற்றிய சமூக விழிப்புணர்வினை உருவாக்கவும் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கான மதிப்பினை உயர்த்துவதற்காகவும் பொதுமக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் பகவத் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை