அகமதாபாத்
தொழில் முனைவோர் அகில இந்திய அமைப்பு ஒன்று நடத்திய கூட்டத்தில் பங்கேற்க வரும்போது செய்தியாளர்களிடையே அவர் உரையாடினார். அப்போது அவர் கடந்த மூன்றாண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வலுவான அடித்தளம் இட்டதால் பொருளாதார நடவடிக்கைகள் விரிவுபட்டுள்ளன. நிதி விஷயங்களில் அடித்தட்டு மக்களையும் உள்ளடக்கும் நோக்கில் ஜன் தன் கணக்குகள் முதல் சமூக பாதுகாப்பு திட்டங்கள் வரையிலும், பண மதிப்பு நீக்க நடவடிக்கை முதல் டிஜிட்டல் பரிமாற்றங்கள் வரையிலும் பெரிய சீர்த்திருங்களாக முன்னெடுக்கப்பட்டன. கடந்த மூன்றாண்டுகளில் 23 சதவீத வரை பரவியிருந்த நிழல் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். நிழல் பொருளாதாரம் அசைக்கப்பட்டால் வரி வசூல் அதிகரிக்கும். நமது வரி வசூல் அதிகரித்து வருகின்றதை நாம் காண்கிறோம். வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.
வாஜ்பாய் இருபத்தோராம் நூற்றாண்டு ஆசியாவிற்கானது என்றார். அதிலும் இந்தியாவிற்கானது என்கிறார் மோடி என்றும் அவர் குறிப்பிட்டார். சீனா பெரிய பொருளாதாரமாக விளங்கினாலும் இந்தியா ஜனநாயக நாடு என்பதால் சீனாவிடம் இல்லாத ஒன்றைப் பெற்றுள்ளது. மத்திய அரசின் கொள்கைகளால் தொழில் முனைவோர் மீதான சமூகத்தின் பார்வை மாறுபட்டுள்ளது. ஒரு காலத்தில் பணம் படைத்தோரும், சமூகத்தின் உயர்நிலையில் உள்ளோருமே தொழில் முனைவர் ஆக முடியும் என்கிற எண்ணம் மாறிவிட்டது. இன்று சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தொழில் முனைவர் ஆக விரும்புகின்றனர் என்று சுட்டிக்காட்டினார் மேக்வால்.