புதுடெல்லி,
இருவரின் சம்மதத்துடன் நடைபெறும் ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதக் கூடாது, இது தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவை ரத்து செய்யவேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ரோகின்டன் பாலி நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து இருதரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வமான வாதங்களை 20-ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அக்டோபர் மாதம் 2-ந் தேதி ஓய்வு பெறுவதால் அதற்கு முன்பு தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.