கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கோவாக்சின் தடுப்பூசியின் விலை ரூ.600-ல் இருந்து ரூ.400 ஆக குறைப்பு - பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

மாநிலங்களுக்கு வழங்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியின் விலை ரூ.600-ல் இருந்து ரூ.400 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் பாரத் பயோ டெக் நிறுவனமும், இந்திய மருத்துவ கவுன்சிலும் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கின. இதையடுத்து சீரம் நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கோவிஷீல்டு எனும் தடுப்பூசியை தயாரித்தன.

இந்த இரு தடுப்பூசிகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. இதில் கோவாக்சினின் விலை மாநில அரசுகளுக்கு ரூ 600-க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ 1200-க்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த விலையேற்றத்தை மாநில அரசுகள் அதிருப்தி தெரிவித்தன. மேலும் விலையை குறைக்குமாறு கேட்டுக் கொண்டன.

இந்த நிலையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியின் விலை ரூ.600-ல் இருந்து ரூ.400 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு டோஸ் கோவாக்சினின் விலையில் ரூ 200 குறைக்கப்பட்டுள்ளது. இது 33 சதவீதம் விலை குறைப்பாகும். தனியார் மருத்துவமனைகளுக்கான விலையில் எந்த வித மாற்றமும் இல்லை.

முன்னதாக மாநில அரசுகளுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி ரூ 100 குறைத்து ரூ 400-லிருந்து ரூ 300 க்கு விற்கப்படுவதாக சீரம் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்தியாவில் இதுவரை 12.76 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்