தேசிய செய்திகள்

பாரத் பயோடெக் நிறுவனத்தின் குஜராத் கிளையில் இருந்தும் கோவேக்சின் தடுப்பூசி வினியோகம்

பாரத் பயோடெக் நிறுவனத்தின் குஜராத் கிளையில் இருந்தும் கோவேக்சின் தடுப்பூசி வினியோகம் தொடங்கியது.

தினத்தந்தி

ஆமதாபாத்,

ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து நாடு முழுவதும் வினியோகித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளை ஒன்று குஜராத் மாநிலம் பரூக் மாவட்டத்தின் அங்லேஷ்வரில் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு மத்திய அரசு இந்த மாத தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது. அதன்படி உற்பத்தியும் தொடங்கியது. இதில் வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட முதல் தொகுதி தடுப்பூசிகளை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, கொரோனாவுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தை பலப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அங்லேஷ்வரில் இருந்தும் கோவேக்சின் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம், நாடு முழுவதும் வினியோகம் அதிகரிப்பதுடன், ஒவ்வொரு இந்தியரையும் தடுப்பூசி சென்றடையவும் உதவும் என்று தெரிவித்தார். நாடு முழுவதும் நேற்று வரை 63.09 கோடி கோவேக்சின் தடுப்பூசி வினியோகிக்கப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்