கோப்புப்படம் ANI 
தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 1,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் கொரோனா பாதிப்பு 1,530 ஆக பதிவாகியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், மீண்டும் ஒரு சில நகரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் கொரோனா பாதிப்பு 1530 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 22 ஆயிரத்து 89 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் 5,542 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 1,104 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்து 90 ஆயிரத்து 315 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் 3 பேர் கொரோனாவால் உயிரழந்தனர். இதனால் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,232 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 37,501 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...