கோப்பு படம் (பிடிஐ) 
தேசிய செய்திகள்

பஞ்சாப் மாநிலம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிப்பு

பஞ்சாப் மாநிலம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பஞ்சாப் மாநிலத்திற்குள் வரும் பயணிகள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் ஆகும்.

சினிமா திரையரங்குகள் மூடப்படும், உணவு விடுதிகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் வரும் மே 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 78 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்