தேசிய செய்திகள்

கொரோனா பரவல் மோசமாக உள்ளது; “வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்”- கெஜ்ரிவால் அறிவுறுத்தல்

டெல்லியில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனாவின் முதல் அலையில் சிக்கி மீண்ட டெல்லி, இப்போது இரண்டாவது அலையிலும் மாட்டிக்கொண்டுள்ளது. இதையொட்டி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், அவசரம் என இல்லாதவரையில் வீடுகளை விட்டு வெளியே செல்லாதீர்கள், முக கவசத்தையும், கிருமிநாசினியையும் பயன்படுத்துங்கள். தனி மனித இடைவெளியை பின்பற்றுங்கள் என அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், கொரோனா நிலைமையை கையாள்வதற்கு ஊரடங்கு பொதுமுடக்கம் ஒரு தீர்வு ஆகாது என சுட்டிக்காட்டி உள்ள அவர், வைரஸ் பாதிக்கப்பட்டாலும் ஆஸ்பத்திரிகளுக்கு ஓடுவதற்கு பதிலாக வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆஸ்பத்திரி படுக்கைகளை மிகவும் மோசமான நிலையில் உள்ள நோயாளிகளுக்காக விட்டு வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு