புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை அக்டோபர், நவம்பரில் உச்சம் அடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், 2 வது அலையைப் போல கடும் பாதிப்பை ஏற்படுத்தாது. 2-வது அலையில் ஏற்பட்ட பாதிப்பில் 4 ல் ஒரு பங்குதான் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
ஐஐடி-கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் மூன்று பேர் கொண்ட குழுவில் அங்கம் வகித்த மகிந்திரா அகர்வால் கூறுகையில், ஒரு வேளை, புதிதாக அதிதீவிர கொரோனா உருமாற்றமடையாவிட்டால், நிலைமை மோசமடைய வாய்ப்பில்லை நாட்டில் கொரோனா மூன்றாம் அலை உருவானாலும் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகலாம், இரண்டாம் அலை போல அதிகபட்சமாக 4 லட்சம் பேர் வரை கரோனா உறுதி செய்யப்பட்டது போல நேரிடாது என்றார்.