திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 12,868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29,37,033 ஆக உயர்ந்துள்ளது.
மாநில முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 124 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,359 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 11,564 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 28,21,151 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,02,058 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.