தேசிய செய்திகள்

2-ஆண்டுகளுக்குப் பின் வழக்கமான சர்வதேச விமான சேவை இன்று முதல் தொடக்கம்

கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்குக்கு பின்பு, 2 ஆண்டுகள் கழித்து இன்று முதல் (மார்ச் 27) சர்வதேச விமான சேவையை இந்தியா மீண்டும் தொடங்குகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரேனா தெற்று பரவத் தெடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் கொரேனா தெற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது. இதன் காரணமாக இந்தியாவிலும் கொரேனா பெருந்தெற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதனால், அனைத்து விமானப் பேக்குவரத்து சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டன. எட்டு மாதங்கள் வரையில் நீடித்த இந்த ஊரடங்கை தெடர்ந்தது, உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

எனினும், கொரேனா பெருந்தெற்று காலத்தில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை "வந்தே பாரத்" திட்டத்தின் மூலம் மத்திய அரசு இந்தியா அழைத்து வந்தது. பயோ பபுள் முறையில் குறிப்பிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து உள்ளதால், சர்வதேச விமான போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு நிகராக மீண்டும் இன்று முதல் இயக்கப்பட உள்ளன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை