கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பால் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்துவதில் சிக்கல்: பல்கலைக்கழக மானியக் குழு

கொரோனா பாதிப்பால் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

இந்தூர்,

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மத்திய அரசால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் பேராசிரியர் திரேந்திர பால் சிங் இதுபற்றி கூறுகையில், புதிய தேசிய கல்வி கொள்கை அறிவிப்பின் நேரம் நன்றாக இருந்தது. இருப்பினும், தொற்றுநோய் அதன் செயல்பாட்டை பாதித்துள்ளது. நிலைமை சாதாரணமாக இருந்திருந்தால், அது விரைவான வேகத்தில் செயல்படுத்தப்பட்டிருக்கும். மத்திய, மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் உரையாடி வருகிறது. மேலும் இது தொடர்பாக பல்வேறு நிலைகளில் ஒழுங்குமுறை வழிமுறைகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்