கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

நாட்டில் இதுவரை 68 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை தகவல்

நாட்டில் இதுவரை 68 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை 68,26,898 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணைச் செயலாளர் மந்தீப் பண்டாரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (புதன்கிழமை) மட்டும் மாலை 6 மணி வரை 2,15,133 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 68,26,898 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 56,65,172 பேர் சுகாதாரப் பணியாளர்கள், 11,61,726 பேர் முன்களப் பணியாளர்கள் என்று அதில் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து