தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 22 கோடி

2 ‘டோஸ்’ தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 22 கோடியை நெருங்குகிறது.

தினத்தந்தி

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி சூடுபிடித்து வருகிறது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாட்டில் இதுவரை 84 கோடியே 15 லட்சத்து 18 ஆயிரத்து 26 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 62 கோடியே 29 லட்சத்து 2 ஆயிரத்து 393 ஆகும்.

2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 22 கோடியை நெருங்குகிறது. சரியாக 21 கோடியே 86 லட்சத்து 15 ஆயிரத்து 633 பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 72 லட்சத்து 20 ஆயிரத்து 642 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 41 லட்சத்து 99 ஆயிரத்து 612 பேர் முதல் டோசும், 30 லட்சத்து 21 ஆயிரத்து 30 பேர் இரண்டாவது டோசும் போட்டுக்கொண்டுள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்