தேசிய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வு: ‘மோடியின் நண்பர்களுக்கு யோகம்’ ராகுல் காந்தி கருத்து

விலை உயர்வை மறைமுகமாக சாடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை உயர்த்தி இந்திய சீரம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகளுக்கு இந்த தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.400 என்ற விலைக்கும், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.600 என்ற விலைக்கும் வழங்கப்படும்.

இந்த விலை உயர்வு, விமர்சனங்களுக்கு வழி வகுத்து விட்டது.

விலை உயர்வை மறைமுகமாக சாடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், நாட்டில் நெருக்கடி நிலவுகிறது. ஆனால் மோடியின் நண்பர்களுக்கு இது அதிர்ஷ்டமாகவும், மாநிலங்களுக்கு துரதிர்ஷ்டமாகவும் ஆகி இருக்கிறது என சாடி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது