தேசிய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை

இந்தியாவில் முதல் 10 கோடி கோவிஷீல்டு மருந்துகளுக்கு மட்டுமே தலா ரூ.200 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வெளிச்சந்தையில் கோவிஷீல்டு மருந்து ரூ.1,000க்கு விற்பனை செய்யப்படும் என சீரம் இந்தியா நிறுவனம் கூறி உள்ளது.

புனே

சீரம் இந்தியா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவாலா கூறியதாவது:-

நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க செய்வது தான் எங்களுக்கு சவாலானது . ஒரு மாதத்திற்கு 7 முதல் 8 கோடி வரை கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வினியோகிக்க திட்டமிட்டுள்ளோம்.

மத்திய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், முதல் 10 கோடி தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு வெளி சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று பூனாவாலா தெரிவித்தார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்