வார்சா,
போலந்து நாடு, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டை ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு சமமானதாக அங்கீகரித்தது. இதன் மூலம் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவிற்கு பயணம் செய்யும் இந்தியர்களுக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு மற்றும் பிற தடுப்பூசிகளை ஏற்குமாறு இந்தியா கடந்த காலங்களில் ஐரோப்பிய நாடுகளை கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில் போலந்து நாடு கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரித்து உள்ளது. இதன்மூலம் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்ட இந்தியர்கள், போலந்து நாட்டிற்கு செல்லும் போது தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று அறிவித்துள்ளது.