தேசிய செய்திகள்

மும்பை ஐ.ஐ.டி. வகுப்பறைக்குள் நுழைந்த பசுமாடு - வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு

மும்பை ஐ.ஐ.டி. வகுப்பறைக்குள் பசுமாடு ஒன்று நுழைந்த வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

மும்பை,

மும்பை பவாயில் ஐ.ஐ.டி. (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) உள்ளது. இந்த கல்வி நிறுவனத்தின் வகுப்பறைக்குள் அழையா விருந்தாளியாக பசுமாடு ஒன்று வந்து செல்லும் வீடியோ காட்சி நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ காட்சியில் பசுமாடு ஒன்று ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் நுழைந்து கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள வகுப்பறைக்குள் செல்கிறது.

பேராசிரியர் நின்று பாடம் எடுக்கும் பகுதி வழியாக மாணவர்கள் முன்னால் எந்த சலனமும் இன்றி வகுப்பறையின் மறுபக்க வாசல் வழியாக வெளியே செல்கிறது.

இதை அங்கிருந்த பேராசிரியர் மற்றும் மாணவர்கள் திகைப்புடன் பார்த்தபடி நிற்கின்றனர்.

அந்த பசுமாடு ஐ.ஐ.டி. வகுப்பறைக்குள் புகுந்தது கடந்த சனிக்கிழமை என்றும், மழையின் காரணமாக புகலிடம் தேடி அந்த பசுமாடு ஐ.ஐ.டி. வகுப்பறைக்குள் நுழைந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்