பிதோராகார்,
உத்தரகாண்டில் தர்சுலா பகுதியில் ராணுவம் சார்பில் நடந்த மருத்துவ முகாம் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
அவர் நிகழ்ச்சியில் பேசும்பொழுது, எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்களை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்பது இதுபோன்ற நிகழ்ச்சிகளால் பிரதிபலிக்கப்படுகிறது. அவர்களுக்கு சிறந்த கல்வி மற்றும் சுகாதார வசதிகளை உருவாக்குவது அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என கூறினார்.
அதன்பின் அவர் ராணுவ நல நிதியில் இருந்து 25 முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு ,10 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். சக்கர நாற்காலிகள், ஸ்கூட்டர்கள் மற்றும் பிற நல திட்ட பொருட்களையும் அவர் வழங்கினார்.
இதுபோன்று பல்வேறு ராணுவ மருத்துவமனைகளில் நடந்த முகாம்களில் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர்.