தேசிய செய்திகள்

கார் விபத்தில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் மற்றும் அவரின் மகன் இருவரும் கார் விபத்தில் சிக்கினர்.

தினத்தந்தி

மீரட்,

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார். இவர் இந்திய அணிக்காக 68 ஒருநாள் போட்டி, 6 டெஸ்ட் போட்டி, 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் அவுட் சுவிங், இன் சுவிங் என புது பந்தில் மிரட்டுவார். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவார்.

2011- ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் விளையாடினார். கடைசியாக 2012-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

இந்தநிலையில், உத்தரபிரதேச மாநிலம் மீரட் பாக்பத் சாலையில் உள்ள முல்தான் நகரில் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு 10 மணியளவில் தனது மகனுடன் பாண்டவ் நகரில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த டேங்கர் லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இதனால் கிரிக்கெட் வீரரின் கார் அப்பலம்போல் நொறுங்கியது. அதிஷ்டவசமாக அவரும், அவரது மகனும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

வேகமாக வந்து காரில் மோதிய டேங்கர் லாரியின் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் கார் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு