கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்வு

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,612 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக தற்போது கேரளா உள்ளது. அம்மாநிலத்தில் இன்று புதிதாக 4,612 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 04 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், இன்று ஒரே நாளில் 5,835 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் அம்மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரத்து 398 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,985 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 63,484 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை