தேசிய செய்திகள்

ஊரடங்கு தளர்வு; நாட்டில் பாஸ்டேக் வசூல் அதிகரிப்பு

நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வால் சுங்க சாவடிகளில் பாஸ்டேக் வசூல் அதிகரித்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் குறைந்து காணப்படுகின்றன. கொரோனா தாக்கம் குறைந்து வரும் சூழலில், பல மாநிலங்கள், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

நாட்டில் சுங்க சாவடி கட்டண வசூலில் 95 சதவீதம், பாஸ்டேக் வாயிலாகவே வசூலாகி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து, பாஸ்டேக் கட்டாயம் என அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சுங்க சாவடிகளில் பாஸ்டேக் வாயிலான வசூலானது கடந்த ஜூன் மாதத்தில், அதற்கு முந்தைய மே மாதத்தை விட 21 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் வசூல் 2,576 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வசூல் தொகையானது கடந்த மே மாதத்தை விட அதிகமாக இருந்தாலும், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களை விட குறைவாகவே உள்ளது. பாஸ்டேக் பரிவர்த்தனையும், கடந்த மே மாதத்தில் 11.65 கோடியாக இருந்தது. இது கடந்த ஜூனில் 15.79 கோடியாக அதிகரித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை