தேசிய செய்திகள்

ஊரடங்கு தளர்வு: ஆந்திரா-தெலுங்கானா எல்லையில் போக்குவரத்து நெரிசல்

தெலுங்கானாவில் ஊரடங்கு தளர்வை முன்னிட்டு வார இறுதி நாட்களில் ஆந்திரா-தெலுங்கானா எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினத்தந்தி

சூர்யபேட்டை,

தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் (ஞாயிற்று கிழமை நிலவரப்படி) 1,280 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. 2,261 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதேபோன்று 15 பேர் உயிரிழந்து உள்ளனர் என மாநில அரசு தெரிவித்து உள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,03,369 ஆக உயர்ந்து உள்ளது. 5.78 லட்சம் பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 21,137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,484 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கானாவில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனை முன்னிட்டும் மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையை முன்னிட்டும் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தெலுங்கானாவின் சூர்யபேட்டை மாவட்டத்தில் கொடாடா மண்டல் பகுதியில் ராமாபுரம் சோதனை சாவடி பகுதியில் அதிகளவில் வாகனங்கள் ஒன்று கூடியதில் நெருக்கடி ஏற்பட்டது.

எல்லையை கடந்து தெலுங்கானாவுக்குள் வருபவர்கள் தங்களுடன் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும். அவர்களை மட்டுமே போலீசார் உள்ளே வர அனுமதித்தனர். இ-பாஸ் இன்றி வருபவர்கள் அனைவரையும் போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை