தேசிய செய்திகள்

பெங்களூருவில் இன்று மின் குறைதீர்வு முகாம்

பெங்களூருவில் இன்று மின் குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம்(பெஸ்காம்) பெங்களூரு உள்பட அதனை சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் மின் வினியோகம் செய்து வருகிறது. பெஸ்காம் சார்பில் ஒவ்வொரு மாதமும் 3-வது சனிக்கிழமை மின் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி இன்று(சனிக்கிழமை) 3-வது சனிக்கிழமை என்பதால், இன்றைய தினம் 87 கிராமங்களில் மின் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை மொத்தம் 5 முறை மின் குறைதீர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் மின் நுகர்வோரின் பிரச்சினைகளுக்கு அதே இடத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் பெஸ்காம் சார்பில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மின் நுகர்வோர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை