தேசிய செய்திகள்

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க செல்போன் இறக்குமதி வரி 15% லிருந்து 20% ஆக உயர்வு - அருண் ஜெட்லி

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க செல்போன் இறக்குமதி வரி 15% லிருந்து 20% ஆக உயர்வு என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய அமசங்கள் வருமாறு:-

* கங்கை நதிக்கரையில் உள்ள கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க நடவடிக்கை

* டெல்லி போன்ற பெருநகரங்களில் காற்று மாசுபடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

* 70 லட்சம் வேலைவாய்ப்பு உருவானது அண்மையில் வெளியான ஆய்வு முடிவில் தெரியவந்தது

* முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடனுதவி; ஜவளித்துறை வளர்ச்சிக்காக ரூ.7,148 கோடி ஒதுக்கீடு

கல்வி தரத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் மிகப்பெரிய கருவியாக உள்ளது

* கல்வியில் டிஜிட்டல் உபயோகத்தை அதிகரிக்கவும், கரும்பலகையிலிருந்து டிஜிட்டல் போர்டுக்கு படிப்படியாக முன்னேறவும் நாங்கள் ஊக்கம் அளிப்போம்.

* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகள் கட்டப்படும்

* கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளுக்காக ரூ. 16, 713 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* 4 கேடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்

* நிலத்தடி நீர் பாசன திட்டங்களுக்கு ரூ2,600 கோடி

* புதிய ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் 12 சதவீதத்தை (பி.எப்) அரசே வழங்கும். பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 8%ல் இருந்து 3% ஆக குறைப்பு

* நடுத்தர தெழில்துறை மீதான வரிகள் குறைக்கப்படும், கடனுதவிகள் விரைந்து வழங்கப்படும்

* தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான நிதி உதவித் திட்டங்கள் அதிகரிப்பு

* பாரத் நெட் திட்டம் மூலம் ஒரு லட்சம் கிராமங்களுக்கு இணையதள இணைப்பு தரப்பட்டுள்ளது -நிதியமைச்சர் அருண் ஜெட்லி

* மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் பாதுகாப்புத்துறை உபயோகப்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் சிறு, குறு தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும்

* நடப்பாண்டு நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5% ஆக உள்ளது, வரும் நிதியாண்டில் 3.3% ஆக குறையும்

* 2018 ஜன. 15 வரையில் நேரடி வரி வளர்ச்சி விகிதம் 18.7% ஆக உள்ளது .கடந்த ஆண்டு பட்ஜெட் தொகையை விட நடப்பாண்டில் 3.5% உயர்வு

* 2019 ஆம் ஆண்டிற்கான உள் கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.5.97 லட்சம் கோடி நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

* அனைத்து தொழில்நிறுவனங்களுக்கும் ஆதார் போன்ற அடையாள அட்டை

* விவசாயிகளால் நடத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட விவசாய நிறுவனங்களுக்கு முழு வரி விலக்கு

* உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க செல்போன் இறக்குமதி வரி 15% லிருந்து 20% ஆக உயர்வு - நிதியமைச்சர் அருண் ஜெட்லி

பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அருண்ஜெட்லி

#BJP | #UnionBudget | #Budget2018 | #IndianEconomy #Farmers | #Agriculture #Vegetables #ArunJaitley #Railway #Cellphone

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்