புது டெல்லி,
இந்த மால்வேர் தாக்குதல் பிரத்யேகமாக வின்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் ஆப் அல்லது வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும் பயனர்களை மட்டுமே குறிவைக்கிறது. பிரபல சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனங்களான காஸ்பர்க்ஸி மற்றும் செக்யூர்லிஸ்ட் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வின் மூலம் இந்த உலகளாவிய ஆபத்து கண்டறியப்பட்டு, இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா, மலேசியா, பிரேசில், மெக்சிகோ, சிங்கப்பூர், பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த தாக்குதல் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மோசடியில் ஹேக்கர்கள் நேரடியாக உங்களிடம் பேசுவதில்லை. மாறாக, பின்வரும் சங்கிலி தொடர் முறையை பயன்படுத்துகிறார்கள்.
ஹேக்கர்கள் முதலில் ஏதேனும் ஒரு வாட்ஸ்அப் பயனரின் கணக்கை முழுமையாக முடக்கி தங்களின் கட்டுப்பாட்டில் எடுக்கிறார்கள். அதன் பிறகு, ஹேக் செய்யப்பட்ட நபரின் வாட்ஸ்அப்பில் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் எண்களுக்கு தீங்கிழைக்கும் கோப்புகளை அனுப்புகிறார்கள்.ஏன் ஏமாறுகிறார்கள்?: மெசேஜ் உங்களுக்கு பிடித்தமான, உங்களுக்கு நன்கு தெரிந்த ஒருவரிடமிருந்து வருவதால், நீங்கள் எந்தவித சந்தேகமும் இன்றி அந்த கோப்பை பதிவிறக்கம் செய்துவிடுகிறீர்கள்.
கோப்புகளின் பெயர்கள் மற்றும் போலியான முகமூடிகள் இந்த மால்வேர் கோப்புகளின் வடிவில் இருக்கும். பயனர்களை கோப்பை திறந்தால் சாதனத்தின் கட்டுப்பாடு பறிபோவதுடன், கடவுச்சொற்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயமும் இருக்கிறது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.