தேசிய செய்திகள்

இந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரிப்பு - மத்திய அரசு

இந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் பல்வேறு விசாரணை முகமைகளால் பதிவு செய்யப்பட்ட சைபர் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 2014-ல் இருந்து 2016 வரையில் கணிசமாக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராம் ஜி அகிர் தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், தேசிய குற்ற ஆவண மையம் (என்சிஆர்பி) அறிக்கையின்படி, 2016-ல் சைபர் மோசடி தொடர்பாக 2,522 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே 2015-ம் ஆண்டு 2,384 ஆகவும், 2014-ம் ஆண்டு 1,286 ஆகவும் இருந்துள்ளது. 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் பதிவான வழக்குகள் தொடர்பான தகவல் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களில் மொத்தம் 6,192 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இ-மெயில், எஸ்.எம்.எஸ். வாயிலான மோசடிகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்விக்கு மத்திய அரசு பதில் அளிக்கையில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து