போபால்,
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.100க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேச ஆற்றல் துறை மந்திரி பிரதுமான் சிங் தோமர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, நாம் காய்கறி சந்தைக்கு சைக்கிளில் செல்வது உண்டா?... நம்மை சுகாதாரமுடன் அது வைத்திருக்கும்.
சுற்று சூழல் மாசுபாடும் குறையும். எரிபொருள் விலை உயர்ந்து உள்ளது. ஆனால், இதன் வழியே கிடைக்கும் பணம் ஏழைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.