தேசிய செய்திகள்

ஒகி புயல் பாதிப்பு தமிழகத்திற்கு ரூ 133 கோடி இடைக்கால நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு அறிவிப்பு

ஒகி புயல் பாதிப்புகளுக்கு நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.133 கோடி இடைக்கால நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி

குமரி மாவட்டத்தில் ஒகி புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் புயலில் சிக்கி உயிரிழந்தனர். ஆயிரகணக்கான பேர் வீடுகளை இழந்த்னர். பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் பாதிப்புக்களை 8 பேர் கொண்ட மத்தியக் குழு நாளை பார்வையிட உள்ளது.இதற்காக மத்திய குழு இன்று சென்னை வந்து உள்ளது

இந்த நிலையில் ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களை சரி செய்வதற்காக தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.133 கோடியை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த தொகை வழங்கப்பட உள்ளது.

மத்திய குழு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில், சேத மதிப்பீட்டின் அடிப்படையில் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு இன்று இடைக்கால நிவாரண நிதியை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...