தேசிய செய்திகள்

சைரஸ் மிஸ்திரியுடன் விபத்தில் சிக்கிய நண்பர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்

டாடா நிறுவன முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த மாதம் 4-ந் தேதி பால்கர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தினத்தந்தி

மும்பை,

டாடா நிறுவன முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த மாதம் 4-ந் தேதி பால்கர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த நண்பர் ஜாங்கீர் பண்டோலேவும் பலியானார். காரின் முன் சீட்டில் இருந்த டாரியஸ் பண்டோலே அவரது மனைவி அனகிதா பண்டோலே ஆகியோர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களுக்கு மும்பையில் ரிலையன்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதில் டாரியஸ் பண்டோலேவுக்கு முழங்கை, மேக்சோ பேசியல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் சிகிச்சை முடிந்து இன்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். அவரது மனைவி அனகிதா பண்டோலே விரைவில் வீடு திரும்புவார் என ரிலையன்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்