தேசிய செய்திகள்

டாடா சன்ஸ் நிறுவன வழக்கில் சைரஸ் மிஸ்திரிக்கு ஆதரவாக தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயம் உத்தரவு

டாடா சன்ஸ் நிறுவன வழக்கில் சைரஸ் மிஸ்திரிக்கு ஆதரவாக தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் சைரஸ் மிஸ்திரி அப்பதவியிலிருந்து கடந்த 2016-ம் ஆண்டு அதிரடியாக நீக்கப்பட்டார். டாடா சன்ஸ் நிறுவன இடைக்காலத் தலைவராக ரத்தன் டாட்டா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. (தற்போது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் உள்ளார்).

பதவி நீக்கத்திற்குப் பிறகு, டாடா குழுமத்திற்கும் மிஸ்திரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சட்டப் போராட்டம் தொடங்கியது. டாடா குழுமத்திற்கு எதிராக சைரஸ் மிஸ்திரி மும்பை உயர் நீதிமன்றத்திலும், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்திலும் 2016-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மிஸ்திரி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், கம்பெனிகள் சட்டப்படி தன்னை பதவி நீக்கவில்லை என்று மிஸ்திரி குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் சந்திரசேகரனின் நியமனம் சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்த தீர்ப்பாயம், சைரஸ் மிஸ்திரியை மீண்டும் செயல் தலைவர் பதவியில் மீண்டும் அமர்த்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் இந்த உத்தரவு 4 வாரங்களுக்கு பின்னர்தான் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த உத்தரவை எதிர்த்து டாடா குழுமம் மேல்முறையீடு செய்யலாம். முன்னதாக நடராஜன் சந்திரசேகரனை செயல் தலைவராக டாடா குழுமம் நியமனம் செய்திருந்தது. இதனை தேசிய தீர்ப்பாயம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்