தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்

அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.

தினத்தந்தி

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்ட ராமர் கோவிலில் நாடு முழுவதும் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். பின்னர் இரவு 9 மணியளவில் நடை அடைக்கப்படும்.

இந்த நிலையில் அயோத்தி கோவிலில் பக்தர்கள் தரிசனம் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 9 மணிக்கு பதிலாக 8.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் நடை அடைக்கப்படும். மேலும், மதியம் 12.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மூடப்பட்டு, மதியம் 1 மணிக்கு மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா