கோப்புப் படம் 
தேசிய செய்திகள்

ஜேஇஇ முதன்மை தேர்வுகளுக்கான தேதி மாற்றம்..!

ஜேஇஇ முதன்மை தேர்வுகளுக்கான தேதிகளை மாற்றியமைத்து தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜேஇஇ முதன்மை தேர்வுகளுக்கான தேதிகளை மாற்றியமைத்து தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு கட்டங்களாக இந்த தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில் தற்போது ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி முதல் கட்ட முதன்மைத் தேர்வுகள் ஜூன் 20-ந்தேதியிலிருந்து 29-ந்தேதி வரை நடைபெறும் என்றும் இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுகள் ஜூலை 21-ந்தேதியிலிருந்து 30-ந்தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல் கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

மேலும் www.nta.ac.in மற்றும் https://jeemain.nta.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து