தேசிய செய்திகள்

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக மகள் போராட்டம்

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக அவரது மகள் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தினத்தந்தி

பாட்னா,

மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானின் முதல் மனைவிக்கு பிறந்த பெண் ஆஷா பஸ்வான். இவருக்கும், பஸ்வானுகும் இடையே தற்போது நல்லுறவு கிடையாது. ஆஷா பஸ்வான், ராஷ்டிரீய ஜனதாதளத்தில் இருக்கிறார்.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு ராம்விலாஸ் பஸ்வான் அளித்த பேட்டியில், படிப்பறிவற்றவர் கூட இம்மாநில முதல்-மந்திரியாக இருந்துள்ளார் என்று கூறினார். அவர் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரிதேவியை குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதை சுட்டிக்காட்டி, ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக அவருடைய மகள் ஆஷா தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளார். பஸ்வான் மன்னிப்பு கேட்கும்வரை எனது போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு