தேசிய செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு டி.சி.ஜி.ஐ. ஒப்புதல்

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்து உள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாட்டில் சமீப காலங்களாக கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் தொற்று எண்ணிக்கை 10 லட்சம் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்திருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி பயன்பாட்டுக்கு வரும்.

ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் ரெட்டிஸ் லேப் என்ற நிறுவனம் பரிசோதித்து வருகிறது. ரெட்டிஸ் லேப் நிறுவனம் இந்தியாவில் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது. இதனையடுத்து, நிபுணர் குழு இதனை ஆய்வு செய்து அவசரகால தேவைக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்தி கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91.6 சதவீத செயல்திறன் மிக்கவை ஆகும்.

இந்த சூழலில், நிபுணர் குழுவின் ஒப்புதலை தொடர்ந்து, நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டி.சி.ஜி.ஐ.) ஒப்புதல் அளித்து உள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த 60வது நாடு இந்தியா என ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு தெரிவித்து உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு