புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 899 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,07,90,183 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 17,824 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 80 ஆயிரத்து 455 பேர் குணமடைந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.13% உயிரிழப்பு விகிதம் 1.43% ஆக உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் நிலைமை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய ராஜேஷ் பூஷண் கூறியதாவது:-
நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 70 சதவீதம் பேர் கேரளம் மற்றும் மராட்டிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த 3 வாரங்களில் 47 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை. அதே நேரத்தில் 251 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. மேலும், நாடு முழுவதும் சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு 5,912 அரசு முகாம் மற்றும் 1,239 தனியார் முகாங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.