தேசிய செய்திகள்

ஆந்திர நீதிபதி கொரோனாவால் டெல்லியில் மரணம்

ஆந்திர நீதிபதி கொரோனாவால் டெல்லியில் மரணம்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் சாகெட் குடும்பநல கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியவர் கோவை வேணுகோபால் (வயது 47). இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெய்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மரணம் அடைந்தார்.

அவரது மரணம் குறித்து சாகெட் வக்கீல் சங்க செயலாளர் திர் சிங் கசானா கூறும்போது, இது அரசாங்கத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட மரணமாகும். நாங்கள், அனைத்து நீதிபதிகள், வக்கீல்களுக்கு தடுப்பூசி போட அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் தினமும் ஆயிரக்கணக்கான மக்களுடன் பணி செய்ய வேண்டியுள்ளது. அரசாங்கம் எங்கள் கோரிக்கையை ஏற்றிருந்தால் இந்த மரணம் ஏற்பட்டிருக்காது என்றார்.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி