கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

குழந்தைகள் பலியான விவகாரம்: உஸ்பெகிஸ்தானிடம் விசாரணை விவரங்கள் கேட்டுள்ளோம் - இந்தியா தகவல்

18 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக உஸ்பெகிஸ்தானிடம் விசாரணை விவரங்கள் கேட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உஸ்பெகிஸ்தானில், இந்திய இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலியாகி விட்டதாக அந்நாடு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- குழந்தைகள் பலியானது தொடர்பாக உஸ்பெகிஸ்தான், இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக முறையிடவில்லை.

இருப்பினும், இந்திய தூதரகம், உஸ்பெகிஸ்தான் அரசை தொடர்பு கொண்டுள்ளது. விசாரணை தொடர்பான கூடுதல் விவரங்களை கேட்டுள்ளது. இந்திய மருந்து நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதிகள் மீது உஸ்பெகிஸ்தான் அரசு சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிகிறது. எனவே, அந்த பிரதிநிதிகளுக்கு தூதரக உதவி அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை