தேசிய செய்திகள்

மராட்டிய முதல்-மந்திரி, மகனுக்கு கொலை மிரட்டல்: கல்லூரி மாணவர் கைது

மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கும் அவரது மகனுக்கும் சமூக வலைத்தளமான எக்ஸ்-இல் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

தினத்தந்தி

மும்பை

மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசு பதவியில் உள்ளது. இந்த ஆட்சியில் ரவுடிகள் பெருகிவிட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி அபய் என்ற வாலிபர் அவரது எக்ஸ் பக்கத்தில், " நான் ரவுடித்தனம் செய்யலாம் என நினைக்கிறேன். அதற்காக ஏக்நாத் ஷிண்டேவுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும். எனக்கு கொஞ்சம் அனுபவம் உள்ளது. மற்ற ரவுடிகள் எனக்கு ஆலோசனை கூறலாம். " என கூறியிருந்தார்.

அதற்கு சுபம் வர்காத் என்ற வாலிபர், " சகோதரரே நான் உங்களுக்கு துப்பாக்கி தருகிறேன். ஆனால் நீங்கள் முதலில் ஏக்நாத் ஷிண்டேவைம், ஸ்ரீகாந்த் ஷிண்டேவையும் கொலை செய்ய வேண்டும். " என கூறியிருந்தார்

இந்த கொலை மிரட்டல் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே , அவரது மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் நான்தெட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் சுபம் வர்காத் என்பது தெரியவந்தது. மேலும் அவர் புனேயில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புனே விரைந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை