தேசிய செய்திகள்

நாட்டில் 10 புதிய அணு உலைகளை அமைக்க முடிவு; மத்திய அரசு தகவல்

நாட்டில் சூழல் மாசுபாடற்ற எரிசக்தி உற்பத்திக்காக 10 புதிய அணு உலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், நாட்டில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை மந்திரி ஜிதேந்திரா சிங் எழுத்துப்பூர்வ முறையில் இன்று பதிலளித்து உள்ளார்.

பிரதமர் அலுவலகம், அதிகாரிகள், பொதுமக்கள் குறைதீர், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி துறையையும் கவனித்து வரும் அவர் அளித்துள்ள பதிலில், நாட்டில் சுற்றுச்சூழலுக்கு மாசு உண்டாக்காத எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக தற்போது கட்டுமான பணியில் உள்ள 8,700 மெகா வாட் திறன் கொண்ட 11 உலைகளுடன் கூடுதலாக, 700 மெகா வாட் திறன் கொண்ட 10 அணு உலைகளை அமைப்பதற்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டுக்கு அரசு அனுமதி அளித்து உள்ளது என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை