தேசிய செய்திகள்

நேபாள விமான விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது; வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

நேபாள விமான விபத்து குறித்த செய்தி பெரும் வேதனை அளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

நேபாளத்தின் Yeti விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் நேபாளத்தின் ரிசார்ட் சிட்டி என்று அழைக்கப்படும் பொக்காராவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது.

அப்போது, விமானம் திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 5 இந்தியர்களும் பயணம் செய்துள்ளனர். அவர்களின் நிலை பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில், நேபாள விமான விபத்து குறித்த செய்தி பெரும் வேதனை அளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்