தேசிய செய்திகள்

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் செயல் மிகவும் காயப்படுத்தியது - சுமித்ரா மகாஜன்

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்களின் செயல்பாடு மிகவும் காயமடைய செய்தது என சுமித்ரா மகாஜன் கூறிஉள்ளார்.

புதுடெல்லி,

பாராளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பசுபாதுகாவலர்கள் என்ற பெயரில் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து பேச அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இவ்விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்டதை தொடர்ந்து சபாநாயகர் சுமித்ரா மகாஜனை நோக்கி காகிதங்களை கிழித்து வீசினர் காங்கிரஸ் உறுப்பினர்கள்.

இதனையடுத்து சபாநாயகரின் கண்ணியத்தை குறைத்து மதிப்பிடும் விதமாக நடந்ததாக காங்கிரஸ் எம்.பி.க்கள், கவுரவ் கோகாய், கே.சுரேஷ், ஆதிர் ராஜன் சவுத்ரி, ரஞ்சித் ரஞ்சன், சுஷ்மிதா தேவ், எம்.கே.ராகவன் ஆகிய 6 பேரையும் 5 நாட்கள் இடை நீக்கம் செய்வதாக சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இதுதொடர்பாக பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சுமித்ரா மகாஜன், நான் மிகவும் வருத்தம் அடைந்து உள்ளேன், மிகவும் காயம் அடைந்து உள்ளேன்... இது ஏன் நடந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் எந்தஒரு பிரச்சனையையும் எழுப்புவதை நான் தடுக்கவில்லை. கேள்வி நேரம் முடிந்ததும் அவர்கள், அவர்களுடைய பிரச்சனையை எழுப்பலாம் என்றே கூறினேன், என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்