தேசிய செய்திகள்

பா.ஜனதா பெண் பிரமுகர் தாமதமாக விடுதலை: மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

பா.ஜனதா பெண் பிரமுகர் தாமதமாக விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக, மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பா.ஜனதா பெண் பிரமுகர் பிரியங்கா சர்மா. இவர், அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் முகத்தை நடிகை பிரியங்கா சோப்ராவின் உடலில் ஒட்டி, கேலிப்படம் தயாரித்து, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இதனால், மேற்கு வங்காள போலீசாரால் கைது செய்யப்பட்டார். பிரியங்கா சர்மாவின் மனுவை ஏற்று, அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், 2 நாள் தாமதமாக அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதற்காக மேற்கு வங்காள அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி, பிரியங்கா சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மேற்கு வங்காள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை