தேசிய செய்திகள்

டெல்லி: 10 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

டெல்லியில் 10 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு டெல்லி மாநகரில் 10 ஆண்டுகள் முடிந்த பழைய பெட்ரோல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் முடிவடைந்த பழைய டீசல் வாகனங்களுக்கும் நேற்று தடை விதித்தது. தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் பற்றிய விவரங்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் போக்குவரத்து கழகம் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.

முன்னதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே 15 ஆண்டுகள் முடிந்த பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் முடிந்த டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்து தீர்ப்பு அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?