தேசிய செய்திகள்

டெல்லியில் இன்றும் கடும் பனிமூட்டம்: ரயில், விமான சேவைகள் பாதிப்பு

டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இந்த பனிமூட்டம் காரணமாக ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. #delhi #fog

தினத்தந்தி

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் அதிகாலை வேளைகளில் அதிக அளவு பனிமூட்டம் காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக, நிலவி வரும் அடர் பனிமூட்டத்தால் ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்றும் இதே நிலை நீடித்த நிலையில், ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

டெல்லியில் 49 ரயில்கள் தாமதமாகவும், 13 ரயில்கள் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டது. 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பனி மூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்கள் அனைத்தும் மெதுவாக சென்றதை பார்க்க முடிந்தது. #delhi #fog

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்