புதுடெல்லி,
கோவா மாநில முதல்மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் அவதிபட்டு வருகிறார். நேற்று அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களை சந்தித்து அவரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
இந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், மனோகர் பாரிக்கர் விரைவில் குணம் அடையவும், அவரது உடல் நிலை நலம் பெறவும் இறைவனை பிரார்த்திப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.