தேசிய செய்திகள்

டெல்லியில் காற்றின் தர குறியீடு 500ஐ மீறி கடுமையான அளவை தொட்டது

டெல்லியில் புழுதி புயலால் காற்றின் தர குறியீடு 500ஐ மீறி இன்று கடுமையான அளவை தொட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், காற்றின் தரம் டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் கடுமையான அளவை மீறி 778 ஆகவும், டெல்லியில் இது 824 ஆகவும் உள்ளது என தெரிவித்துள்ளது. இதனால் மங்கலான நிலை மற்றும் குறைவான தொலைவிற்கே தெளிவாக காண முடியும் சூழல் ஏற்படும்.

காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக இருப்பவர் கஃப்ரான் பெய்க். இவர் கூறும்பொழுது, நாட்டின் மேற்கு பகுதியில் தரைமட்ட அளவிலான புழுதி புயல் ஏற்பட்டு உள்ளது. இது காற்றில் பெரிய அளவிலான துகள்களை கடுமையாக உயர்த்தி உள்ளது.

இதனால் டெல்லியின் மாசு அளவில் உயர்வு ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார். டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் காற்றின் தரம் புழுதி புயலால் சீர்கேடடைந்து உள்ளது.

ஆனால் வேகமுடன் வீசும் காற்றுடன் சேர்ந்து கிளம்பும் புழுதி புயல் நீண்டநேரம் நீடிக்காது. அதனால் காற்றின் தரம் இன்று மேம்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

காற்றின் தர குறியீடு ஆனது 0 முதல் 50 வரை இருப்பின் நல்லது என்றும், 51 முதல் 100 வரை இருப்பின் திருப்தி என்றும், 101 முதல் 200 வரை இருப்பது மிதம் என்றும், 201 முதல் 300 வரை உள்ள அளவு மோசம் எனவும், 301 முதல் 400 வரை இருப்பது மிக மோசம் என்றும் 401 முதல் 500 வரையிலான அளவு கடுமையானது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்