தேசிய செய்திகள்

டெல்லி முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக பதவியேற்றார்

டெல்லி முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 16-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். டெல்லி துணை முதலமைச்சராக மணீஷ் சிசோடியா பதவியேற்றுக்கொண்டார் அவர்களை தொடந்து 6 மந்திரிகள் பதவியேற்றுக்கொண்டனர்.

அழைப்பு இல்லாததால் பதவியேற்பு விழாவில் பிற மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு