தேசிய செய்திகள்

டெல்லிக்கு சென்ற விமானத்தில் பறவை மோதியதால் தீப்பிடித்தது - உள்ளூர் மக்கள் தகவல் கொடுத்ததால் அவசரமாக தரையிறக்கம்!

விமானத்தில் தீப்பற்றியதை பார்த்த உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்திலிருந்து, தலைநகர் புதுடெல்லிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று பகல் 12 மணியளவில் புறப்படத் தயாரானது. அந்த விமானம் வானில் பறக்க தொடங்கியதுடன், தொழில்நுட்பக் கோளாறால் விமானத்தின் வெளிப்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

டெல்லிக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பறவை மோதியதால், ஒரு இன்ஜினில் தீப்பிடித்தது. விமானத்தில் தீப்பற்றியதை பார்த்த உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக மாவட்ட மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, டெல்லி செல்லும் விமானம் அவசரமாக பாட்னா விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியது. அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.185 பயணிகளும் பத்திரமாக இறங்கினர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் விமான இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து, பொறியியல் குழு மேலும் ஆய்வு செய்து வருகிறது என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டு பெரும் விமான விபத்தும் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்